;
Athirady Tamil News

கண்டன கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஈரோஸ்’ ஆதரவு!!

0

மார்ச் 16 கண்டன கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்ச் சமுகம் ஒன்றினைந்த ஆதரவு குரல் ஓங்கி ஒலிக்கட்டும். என ஈழவர் ஐனநாயக முன்னணி.(ஈரோஸ்) தெரிவித்துள்ளது

யாழ்.பல்கலைக்கழக மாணவ சமுகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மார்ச் 16 கண்டன கவனயீப்பு பேரணியில் அனைத்து தமிழ் மக்களும் கலந்து கொண்டு நடைபெற்ற இனவழிப்புக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் எதிராக குரல் கொடுக்க அணிதிரண்டெழுந்து வருமாறு ஈரோஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவான ஈழவர் ஐனநாயக முன்னணி அறைகூவல் விடுக்கிறது. இது தொடர்பாக அவர்கள் அனுப்பிவைத்துள்ள ஊடக குறிப்பில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது…

யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் கடக்கும் ஆண்டிலும் இதுவரை தமிழ் மக்களுக்கான தீர்வுக்கான முயற்சி இழுபறி நிலையில் தான் காணப்படுகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அவர்களைத் தேடியலையும் உறவுகள் தொடர்ந்தும் அலைக்கழிக்கப்படுகின்றனர்.அவர்களைத் தேடும் போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களில் இதுவரை 19 பேர் இறந்துள்ளனர்.நீண்ட காலம் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகள் இற்றைவரை விடுதலை செய்யம்படவில்லை.
இராணுவ ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தமிழ் மக்களின் வாழ்விடங்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லை..

மீள்குடியேற்றங்கள் முழுமையாக செயற்படுத்தவில்லை.யுத்தத்தால் உடல் உள ரீதியாக பாதிக்கப்பட்டோருக்கு இதுவரை முறையான மருத்துவ வசதி செய்து கொடுக்கவில்லை.முன்னாள் போராளிகளின் தொழில் மற்றும் வாழ்வாதார திட்டங்கள் ஒழுங்குபடுத்தலில் அக்கரை செலுத்தவில்லை.. தமிழ் மக்களின் தொன்மைமிகு வழிபாட்டு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்மட்டு வழிபாடு செய்ய தடை சைய்யப்மட்டு வருகிறது.புதிதாக புத்தர் சிலைகள் முளைத்தெழுகின்றது திட்டமிட்ட வகையில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் போதை பொருட்களின் பாவனை அதிகரிக்க ஊக்குவிக்கப்படுகிறது.கல்விக் கூடங்களுக்கு அருகாமையில் சாராயவிற்பனை நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது இவ்வாறான தமிழ்மக்களின்கலை பண்பாட்டை..

சமுக ஒழுக்க வழுமியங்களை சிதைக்கும் வகையில் செயற்படும் அரசின் போக்கைக் கண்டித்தும் இனப் பிரச்சனைக்கு விரைவாக தீர்வு காணுமாறு கோரியும் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதை கண்டித்தும் யாழ் பல்கலைக் கழக முன்றலில் இருந்து யாழ் முற்றவெளியை நோக்கிய கண்டன ஆர்ப்பாட்ட கவனயீர்ப்பு பேரணியில் எமது உரிமையை உலக அரங்கில் ஓங்கி ஒலிக்க குரல் கொடுக்க அனைவரையும் அழைக்கின்றோம்.என்று அந்த அறிக்கையில் உள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − one =

*