;
Athirady Tamil News

அனுமதிபத்திரத்திற்கு அதிகமாக மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனம் உட்பட சாரதி கைது!! (படங்கள்)

0

ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு மேலாக மணல் ஏற்றிவந்த டிப்பர் வண்டி ஒன்றை தலவாகலை விஷேட அதிரடிபடையினர் கைபற்றியூள்ளதோடு டிப்பர் வண்டியின் சாரதியூம் கைது செய்யபட்டு ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளதாக தலவாகலை விஷேட அதிரடிபடையினர் தெரிவித்தனர் இந்த சம்பவம் 14.03.2019 வியாழகிழமை இரவூ இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

தலவாகலையில் இருந்து ஹட்டன் பகுதிக்கு அனுமதி பத்திரத்தோடு மணல் ஏற்றிவந்த டிப்பர் வண்டியை தலவகலை விஷேட அதிரபடையின் தீடிர் என சோதனைக்கு உட்படுத்தபட்ட போது மணல் ஏற்றவருவதற்கான அனுமதி பத்திரத்தில் பதிவூ செய்யபட்ட அளவிற்கு மேல் அதிக மான மாணல் கானபட்டமையினாலே குறித்த டிப்பர் வண்டியின் சாரதி கைது செய்யபட்டு ஹட்டன் தலைமையாக பொலிஸ்நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளதாக ஹட்டன் தலைமையக பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதேவேலை மீட்கபட்ட டிப்பர் வண்டியையூம் கைது செய்யபட்ட சாரதியையூம் அட்டன் பொலிஸார் அட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தபட உள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 3 =

*