;
Athirady Tamil News

செல்போன் தொழிலில் கொடிகட்டி பறக்கும் கோடீஸ்வரரின் அதிரடித் திட்டம்….!!

0

பிரித்தானியாவை சேர்ந்த மிகப் பெரிய கோடீஸ்வரரான ஜான் கவுட்வெல் தனது இறப்புக்கு பின்னர் தனது சொத்தின் 70 சதவீதம் நல்ல காரியங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என உறுதியுடன் இருப்பதாக கூறியுள்ளார்.

செல்போன் தொழிலில் கொடிகட்டி பறக்கும் ஜான் கவுட்வெல் (66) லின் சொத்து மதிப்பு சுமார் £1.5 பில்லியன் இருக்கும் என கூறப்படுகிறது.இவர் தனது மனைவி கேட் உடன் 25 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில் 2001-ல் அவரை பிரிந்தார்.

தற்போது 35 வயது பெண்ணான மொடஸ்டா என்பவருடன் ஜான் வாழ்ந்து வருகிறார்.அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், என் இறப்புக்கு பின்னர் என்னுடைய 70 சதவீத சொத்துக்கள் நல்ல காரியங்களுக்கு பயன்பட வேண்டும் என விரும்புகிறேன்.மீதமுள்ள 30 சதவீத சொத்துக்கள் என்னுடைய ஐந்து பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன்.

என்னுடைய எல்லா சொத்துக்களையும் என் பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டால் அது பணக்காரன் – ஏழை பிளவை சரிசமமாக்க உதவும் என நம்புகிறேன்.எல்லா சொத்துக்களையும் பிள்ளைகளுக்கு கொடுப்பது அவர்களுக்கு நல்லதில்லை என நினைக்கிறேன்.

என்னை போலவே பெரும் கோடீஸ்வரர்களாக இருப்பவர்கள் தங்களது பணத்தின் பெரும் பகுதியை தொண்டு செய்வதற்கும், நல்ல காரியங்களுக்காகவும் செலவிட வேண்டும் என கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + fifteen =

*