;
Athirady Tamil News

உணவகங்களின் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு!!

0

உணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவுப் பொருட்களை கையாலும் உணவகங்கள், வெதுப்பகங்களின் உரிமையாளர்களுக்கு உணவுப் பொருட்களை கையாளும் விதம் தொடர்பில் விழிப்புணர்வு கருத்தமர்வு இடம்பெற்றுள்ளது.

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் தலைமையில் குறித்த கருத்தமர்வு இன்று காலை 9.30 மணியளவில், மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, உணவு பொருட்களை கையாளும் உணவங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதார நடவடிக்கைகள், கடமையாற்றுபவர்களின் சுகாதாரம் மற்றும் உணவுப்பொருட்களை வைக்கும் முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்னும் சில தினங்களில் உணவு கையாளும் நிலையங்களுக்கு திடீர் விஜயத்தை மேற்கொள்ளவுள்ள மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் தமது அவதானங்களை மேற்கொள்ளவுள்ளதோடு, ஆலோசனைகளையும் வழங்கவுள்ளனர்.

சட்ட திட்டங்களுக்கு அமைய இயங்காத உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த கருத்தமர்வில் உணவகங்களின் உரிமையாளர்கள், வெதுப்பகங்களின் உரிமையாளர்கள், வண்டில்களில் உணவு பொருட்கள் விற்பனை செய்வோர் என உணவுப்பொருட்களை கையாளும் நிலையங்களின் உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக மன்னாரில் இருந்து “இராவணேஸ்வரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 − six =

*