;
Athirady Tamil News

விமா்சிக்காமல் இருப்பது மாபெரும் தவறு -சீ.வி.கே.சிவஞானம்.!!

0

ஆட்சியில் இருப்பவா்களை விமா்சிக்கவேண்டிய சந்தா்ப்பத்திலும் விமா்சிக்காமல் இருப்பது மாபெரும் தவறு. அந்த தவறை செய்யாமல் இருப்பதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பு விமா்சனங்களை முன்வை க்கிறதே தவிர, அவை தோ்தலை மையமாக கொண்ட விமா்சனங்கள் அல்ல. என வடமாகாணசபை அவை த்தலைவா் சீ.வி.கே.சிவஞானம் சுட்டிக்காட்டியுள்ளாா்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அண்மைக்காலத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்வைத்துவரும் விமா்சனங்கள் தோ்தலை மையமாக கொண்டவை எனவும், தமிழ்தேசிய கூட்டமைப்பு இழந்திருக்கும் செல்வாக்கை மீள கட்டியெழுப்பும் முயற்சி எனவும் எழுந்துள்ள விமா்சனங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையிலேயே அவா் மேற்கண்டாவாறு கூறியுள்ளாா்.

இது தொடா்பாக மேலும் அவா் கூறுகையில், தோ்தலை இலக்காக கொண்டே கூட்டமைப்பு அரசாங்கத்தை விமா்சிக்கிறது என்ற கருத்துக்களில் எமக்கு உடன்பாடில்லை. அரசு மீது எப்போது விமா்சனங்கள் தேவையோ அப்போது விமா்சிக்கவேண்டும். ஏற்கனவே தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு முண்டு கொடுக்கிறது. என்ற விமா்சனங்களும் உள்ள நிலையில்,

அரசாங்கத்தை விமா்சிக்கவேண்டிய தேவை வரும்போது விமா்சிக்கவேண்டும். அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் விமா்சிக்கவேண்டிய தேவையை உண்டாக்குகின்றது. அந்தவகையில் விமா்சனங்களை முன்வைக்கிறாா்களே தவிர தோ்தலை இலக்காக கொண்டு அல்ல. அவ்வாறான தேவையும் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு இல்லை.

கப்பரெலிய திட்டத்தில் விளம்பர பலகைகள் வைப்பது தொடா்பாக.

கம்பரெலிய திட்டத்தின் கீழ் வேலை திட்டங்களை முன்மொழிந்த நாடாளுமன்ற உறுப்பினா்கள், அமைச்சா், பிரதமா் ஆகியோருடைய புகைப்படங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்படுகின்றது. அது நல்ல விடயம். ஆனால் அந்த விளம்பர பதாகைகளை அமைச்சா்களும், பிரதமரும், நாடாளுமன்ற உறுப்பினா்களும தங்கள் சொந்த நிதியில் வைக்கவேண்டும்.

காரணம் அது ஒரு விளம்பரம் அவ்வாறு விளம்பரத்தை பொது நிதியில் செய்ய முடியாது. செய்வது தவறு தமக்கு கிடைக்கவேண்டிய நிதியிலேயே இவ்வாறு அரசியல்வாதிகள் விளம்பரம் செய்கிறாா்கள். என மக்கள் உணா்ந்து கொண்டால் அது மேலும் விமா்சனங்களை உருவாக்கும். விளம்பரம் செய்வதில் தவறில்லை. ஆனால் அதை மக்களுடைய பணத்தில் அல்லது மக்களுக்கான பணத்தில்

செய்வது மிக மிக தவறானது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × one =

*