;
Athirady Tamil News

உத்தரபிரதேசத்தில் தொலைகாட்சிப்பெட்டி வெடித்ததில் 3 குழந்தைகள் பலி..!!

0

உத்தரபிரதேசத்தில் உள்ள கதவுளி கிராமத்தில் உள்ள வீட்டில் நேற்றிரவு 4 குழந்தைகள் வழக்கம்போல தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக திடீரென தொலைக்காட்சிப் பெட்டி வெடித்தது.

இச்சம்பவத்தில் தொலைக்காட்சிப் பெட்டியின் அருகே அமர்ந்து, பார்த்துக் கொண்டிருந்த 4 குழந்தைகளில், சப்னம்(11), ஃபர்தீன்(12) மற்றும் ஷிஃபா(10) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர்.

இந்த விபத்தில் ஒரு குழந்தை படுகாயமுற்றதையடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக துணை காவல் அதிகாரி அசோக் குமார் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + 3 =

*