;
Athirady Tamil News

மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!! (படங்கள்)

0

கொழும்புத்துறை மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள வீதி ஒன்று தனியார் சிலரது கோரிக்கையின் அடிப்படையில் யாழ் மாநகரசபையினால் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அவ் விவகாரத்தோடு தொடர்புபட்டு காணி உரிமையாளர் மற்றும் கிராமச் சங்க உறுப்பினர்களை வாக்குமூலம் பெறுவதற்கு என அழைத்த யாழ்ப்பாணம் பொலிஸார் சிங்களத்தில் எழுதிய வாக்குமூலத்தில் தம்மை மிரட்டி கையொப்பம் வாங்கியதாகவும் நேற்றைய தினம் (03) இரவுக்குள் குறித்த வீதியை மூடாது விட்டால் கைது செய்யப்படுவீர்கள் என அச்சுறுத்தியதாகவும் தெரிவித்து யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொது மக்களின் பாவனைக்காக 2015 ஆம் ஆண்டு தனது காணியின் ஒரு பகுதியை சட்டரீதியான முறையில் உப பிரிகையிடல் செய்து பொதுமக்களுக்கு வீதிப் பாவனைக்கு வழங்கிய காணி உரிமையாளர் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் ஆகியோரே தம்மை பொலிசார் மிரட்டி கையொப்பம் வாங்கியதாகவும் கைது செய்வோம் என அச்சுறுத்தியதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடுகையில் ,

குறித்த காணிப் பிரச்சனை தொடர்பில் எதிராளிகளால் செய்யப்பட்ட பொலிஸ் முறைப்பாட்டிற்காக வாக்குமூலம் பெற வருமாறு கோரியதை அடுத்து தாம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் அங்கு தமது கருத்துக்களைக் கேட்டுவிட்டு சிங்களத்தில் எழுதிவிட்டு அதில் கையொப்பமிடுமாறு தாம் அச்சுறுத்தப்பட்டு கையொப்பம் பெறப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × five =

*