;
Athirady Tamil News

ஜம்மு காஷ்மீரில் வாகன விபத்து – விமானப்படை வீரர்கள் இருவர் பலி..!!

0

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அவந்திபோரா பகுதியில் இந்திய விமானப்படை முகாம் அமைந்துள்ளது. இன்று முகாமில் இருந்து விமானப்படை வீரர்கள் வாகனம் ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

திடீரென அந்த வாகனம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 2 விமானப்படை வீரர்கள் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாகன விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + eighteen =

*