;
Athirady Tamil News

காதலிக்க மறுத்த இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை – வாலிபர் கைது..!!

0

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ளது சியாரம். இந்த பகுதியை சேர்ந்தவர் நீது (வயது 22). அதே பகுதியில் உள்ள வடக்கேகோட்டையை சேர்ந்தவர் நிதிஷ் (24). நீதுவை பல நாட்கள் பின் தொடர்ந்த நிதிஷ் தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தினார். ஆனால் நீது மறுத்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு இளம்பெண்ணின் வீட்டிற்கு நிதிஷ் சென்றார். அப்போது பெண்ணின் பெற்றோரும் இருந்தனர். நீதுவை தனியே அழைத்த நிதிஷ் தன்னை காதலிக்கும்படி மீண்டும் வற்புறுத்தினார். காதலிக்க முடியவே முடியாது என்று இளம்பெண் தீர்மானமாக கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த நிதிஷ் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து நீதுவின் தலைமுதல் உடல் முழுவதும் ஊற்றினார். நீது சுதாரிப்பதற்குள் அவர் மீது தீ பற்றவைத்தார்.

தீ உடல் முழுவதும் பற்றி எரிந்தது. அதிர்ச்சியடைந்த நீது அலறி சத்தம்போட்டார். பெண்ணின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது சம்பவ இடத்திலேயே நீது உடல் கருகி பலியானார்.

பொதுமக்கள் நிதிசை பிடித்து திருச்சூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 2 =

*