;
Athirady Tamil News

பெரம்பலூர் அருகே கல்லால் முகத்தை சிதைத்து வாலிபர் கொடூரக்கொலை.!!

0

பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் சுடுகாடு உள்ளது. அதன் எதிரே தனியார் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இன்று காலை அந்த வழியாக பொதுமக்கள் சென்ற போது கட்டிடத்தின் பின்புறம் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து பொதுமக்கள் பெரம்பலூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் கல்லால் தாக்கி முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதனால் அவரை மர்மநபர்கள் கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவரை கொன்ற மர்மநபர்கள் யார்?, எதற்காக கொலை செய்தனர்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் மது பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள், பெரிய பாறாங்கல் ஆகியவை கிடந்தது. இதனால் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய போது, போதை தலைக்கேறியதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அவரது நண்பர்களே சேர்ந்து கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் வாலிபரின் முகம் சிதைக்கப்பட்டுள்ளதால் அவரை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அணிந்திருந்த ஆடையில் பெயிண்ட் படிந்திருப்பதால், அவர் பெயிண்டராக இருக்கலாம் என தெரிகிறது.
கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அவர்கள் அங்கு பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். இந்த கொலை சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × one =

*