;
Athirady Tamil News

முதல் கணவனின் குழந்தைகளுடன் 2 வது, 3வது கணவர்களை நண்பர்களாக்கி ஒரே வீட்டில் வாழும் கில்லாடிப் பெண்…!!

0

தென் ஆப்ரிக்காவின் கேப் டவுண் நகரை சேர்ந்த பெண் அலி ஜோன்ஸ் (29), இவருக்கும் இவரது பள்ளி நண்பர் டாமியன் க்ரூன்டே (30) என்பவரும் பள்ளி நண்பர்கள். இவர்கள் பள்ளி பருவத்திலேயே காதலித்து வந்தனர்.

இவர்கள் பள்ளி காலம் முடிந்து சில ஆண்டுகளுக்கு பின்பு ஒரு நாள் இவர்கள் நண்பர்களாக இணைந்து வெளியூருக்கு சுற்றுலாச் சென்றுள்ளனர். அங்கு டாமியனும், அலி யும் ஒன்றாக சேர்ந்து தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அப்பொழுது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

அப்பொழுது அலிக்கு வேறு ஒருவருடனான தொடர்பில் ஏற்கனவே ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்த சம்பவம் நடந்தது கடந்த 2011ம் ஆண்டு. அதன் பின்பு இவர்கள் இருவரும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

2 குழந்தைகளையும் வளர்ப்பதிலும், வேறு சில விஷயங்கள் காரணமாகவும் இருவரும் இடையே மனகசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் அதை சரி செய்ய முயற்சி செய்தனர். அலி தனது 19 வயதிலேயே டாமியனுக்கு முன்பாகவ வேறு ஒருவருடன் வாழ்ந்து பெண் குழந்தையை பெற்றெடுத்ததால், தற்போது அந்த குழந்தையும் வளர்ந்து வருகிறது.இந்நிலையில் அலி, மாட்டி ருச்டன் (26) என்ற நபரை சந்தித்தார். அவருடன் காதலில் விழுந்து விட்டார். அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என அலி விரும்பினார்.

ஆனால், அது டாமியனிற்கு பிடிக்கவில்லை. அலி இவர்கள் இருவரையும் எப்படியாவது நண்பர்களாக்கிவிட வேண்டும் என கடுமையாக முயற்சி செய்தார் அலி. ஆனால், அது பெரியதாக பலனளிக்கவில்லை. இந்நிலையில் தனது இரண்டு குழந்தைகளையும் டாமியன் மற்றும் மாட்டியின் பொறுப்பில் விட்டு விட்டு, லண்டனிற்கு சுற்றுலாச் சென்று விட்டார்.

அவர் சில மாதங்கள் சுற்றுலாச் சென்ற இடைவேளையில் மாட்டியும், டாமியனும் அவ்வப்போது குழந்தை பாராமிப்பிற்காக சந்திக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அப்பொழுது இருவரும் பேசி ,பழகி நண்பர்களாகிவிட்டனர்.

இந்நிலையில் சுமார் 3 மாதங்களுக்கு பின்பு அலி திரும்பி வந்த அன்று மாலை மூவரும் இணைந்து மது அருந்தியுள்ளனர். அப்பொழுது இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து வாழ்வது குறித்து காமெடியாக பேசினர். ஆனால், அந்த ஐடியா அனைவருக்கும் பிடித்திருந்தது.அன்று முதல் அவர்கள் மூன்று பேரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களே அலியின் குழந்தைகளையும் பராமரித்து வருகின்றனர்.

இது குறித்து அலி கூறும் போது, இரு ஆண்களுடனும் ஒரே நேரத்தில் வாழ்வது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும் என நினைத்தேன். ஆனால், மூவருக்குமிடையே நல்ல புரிதல் இருந்தால் அது அழகான உறவாக அமையும். அதனால் தான், இவர்கள் இருவரையும் நண்பர்களாக்கும் முயற்சியை மேற்கொண்டேன். எனக் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 3 =

*