;
Athirady Tamil News

13 ஆவது திருத்தச் சட்டம் நிராகரிக்கப்பட்டது – செ.கஜேந்திரன்!!

0

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திடட வரைபில் 13 ஆவது திருத்தச் சட்டம் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் அதன் இணைத்தலைவர்களில் ஒருவரான வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தற்போது அதே சட்ட மூலத்தை கொண்டு வர நிற்பது வேடிக்கையாக உள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்தார்.

யாழ் ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை -இந்திய உடன்படிக்கையில் 13 ஆவது திருத்த சட்டம் தான் தீர்வு என குறிப்பிடப்படவில்லை.குmறித்த ஒப்பந்தத்தை அன்றைய காலத்திலேயே ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பு மட்டுமே ஆதரித்தது.மாறாக விடுதலைப்புலிகள் உட்பட ஏனைய அனைத்து தமிழ் தரப்பும் அதனை எதிர்த்தது. இந்நிலையில் இலங்கை – இந்திய உடன்படிக்கையில் தமிழர் தரப்பில் இந்தியா கையொப்பம் இட்ட்து என நீதியரசர் விக்னேஸ்வரன் அண்மையில் ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.

அவரின் இந்த கருத்து அபத்தமான கருத்து, இந்த கருத்தை தெரிவித்தமைக்காக வெட்க்கி தலை குனிகின்றோம்.அன்றைய காலகட்ட்டத்தில் அரச தரப்பு இந்தியாவிடம் ஓர் கோரிக்கையை வைத்தது. அதாவது ஆயுதம் ஏந்தி போராடுபவர்களை முடக்க வேண்டும்,அவர்களின் தனி நாட்டுக் கோரிக்கையை இல்லாது செய்ய வேண்டும் என இந்தியாவிடம் அரசு கேட்ட்து.அதன் ஓர் நடவடிக்கையாகவே இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஏற்பட்ட்து.

எனினும் அந்த ஒப்பந்தத்தை ஓர் அமைப்பை தவிர ஏனையவர்கள் எதிர்த்தனர்.குறித்த ஒப்பந்தம் ஊடாக 13 திருத்த சட்ட்டமூலம் உருவாக்கப்பட்டு ஓரையாடசிக்குள் தீர்வு என கூறப்பட்ட்து. தமிழர்கள் சமஷடி தீர்வினையே கோரி வருகின்றனர். தமிழர்கள் இன்றுவரை சுய நிர்ணயம்,தமிழ்த் தேசியத்துக்காக போராடி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் முதல்வரின் கருத்து தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவரது சமீப கால செயற்பாடுகள் அவர் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பின் பாதையில் பயணிப்பதை போலவே அமைந்துள்ளது. என்றார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 11 =

*