;
Athirady Tamil News

அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம்!! (படங்கள்)

0

திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் 05ஆம் திகதி காலை 09 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 15 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 13ஆம் திகதி மாலை தங்கரதமும் , 14ஆம் திகதி மாலை திருமஞ்ச திருவிழாவும் , 15ஆம் திகதி மாலை திருக்கைலாய வாகனமும் , 17ஆம் திகதி சப்பர திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 19ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

மகோற்சவ காலங்களில் வசந்தமண்டப பூஜை காலை 10 மணிக்கும் , மாலை 06.15 மணிக்கும் நடைபெறும்.

தேர் மற்றும் தீர்த்த திருவிழா அன்று காலை 07 மணிக்கு வசந்தமண்டப பூஜை நடைபெறும்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + eighteen =

*