;
Athirady Tamil News

கிளிநொச்சியில் ​கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

0

கிளிநொச்சி, பரந்தன் சந்தியில் 2.40 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் சிறப்பு படையின் அதிகாரிகள் இனைந்து மேற்கொண்ட சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் வாய்க்கால் தர்மபுரம் பகுதியில் வசிக்கும் 35 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் மற்றும் கேரள கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைளுக்காக முல்லைத்தீவு பொலிஸ் சிறப்பு படையின் அதிகாரிகளினால் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 2 =

*