;
Athirady Tamil News

றபடாவின் பந்து வீச்சில் தடுமாறிய பெங்களூர் ; டெல்லிக்கு வெற்றியிலக்கு 150!! (படங்கள்)

0

ஐ.பி.எல் தொடரின் இன்றையப் போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு 150 ஓட்டங்களை பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐ.பி.எல். தொடரின் 20 ஆவது லீக் போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் அணியும் பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன.

பெங்களூர் எம்.சின்னஸ்வாமி மைதானத்தில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன் படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 149 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் அந்த அணியின் சார்பாக விராத் கோலி 41 ஓட்டங்களையும் மெயின் அலி 32 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள பந்து வீச்சில் றபாடா 4 விக்கெட்களையும் கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதனை அடுத்து 150 என்ற வெற்றி இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 11 =

*