;
Athirady Tamil News

நிதிஷ்குமாரை குரங்குடன் ஒப்பிட்டு லாலு விமர்சனம்..!!

0

கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ஜெயிலில் இருக்கும் லாலு பிரசாத் யாதவ் தனது அரசியல் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி உள்ளார். அந்த புத்தகம் விரைவில் வெளிவர உள்ளது.

புத்தகத்தில் என்ன வி‌ஷயங்கள் இருக்கின்றன என்பது பற்றிய விவரங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

அதில், தான் சந்தித்த பல்வேறு அரசியல் தலைவர்கள் பற்றிய தகவல்களை குறிப்பிட்டு இருக்கிறார்.

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் குறித்து அதிகமாக விமர்சித்து இருக்கிறார். பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தளத்துடன் கூட்டணி ஆட்சி நடத்தி வந்த நிதிஷ்குமார் அதில் இருந்து பிரிந்து சென்று பாரதிய ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது குறித்து பல வி‌ஷயங்களை சொல்லி உள்ளார்.

பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்த 6 மாதத்திலேயே மீண்டும் ராஷ்டீரிய ஜனதாதளம் அணிக்கு திரும்பி வர நிதிஷ்குமார் தூது விட்டதாக புத்தகத்தில் கூறி இருந்த தகவல் ஏற்கனவே வெளியானது.

அந்த புத்தகத்தின் 11-வது அத்தியாயத்தில் நிதிஷ்குமாரை குரங்குடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார். நிதிஷ்குமார் அரசியலில் அடிக்கடி தன்னை மாற்றி கொள்பவர் என்று குறிப்பிடும் லாலு குரங்கை மேற்கோள் காட்டி எழுதி உள்ளார்.

இவ்வாறு குரங்குடன் ஒப்பிட்டு கூறி இருப்பது பீகார் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

லாலு பிரசாத் மிகவும் தரம் குறைந்து விமர்சித்து இருப்பதாக பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஐக்கிய ஜனதாதளம் தலைவர் அசோக் சவுத்ரி கூறும் போது, லாலு பிரசாத் தனது அரசியல் வாழ்க்கையில் யாரையும் மதித்தது இல்லை. அவர் தனது அரசியல் கலாசாரத்தைதான் இந்த புத்தகத்தில் வெளியிட்டுள்ளார் என்றார்.

துணை முதல்-மந்திரி சுஷில்குமார் கூறும் போது, லாலு பிரசாத் தனது புத்தகம் முழுவதும் பொய்யை மட்டுமே கூறி இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மாநில காங்கிரஸ் தலைவர் பிரேம்சந்திர மிஸ்ரா கூறும் போது, நிதிஷ்குமார் அரசியலில் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் அல்ல. இதைத்தான் லாலு தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + 1 =

*