;
Athirady Tamil News

ஷிரியாஸ் ஐயரின் அதிரடியில் வெற்றி வாகை சூடியது டெல்லி!! (படங்கள்)

0

ஷிரியாஸ் ஐயரின் அதிரடி அரை சதத்தின் உதவியுடன் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றிபெற்றுள்ளது. இதனால் தொடர் தோல்விகளை பெங்களூர் அணி சந்தித்து வருகின்றது.

ஐ.பி.எல். தொடரின் 20 ஆவது லீக் போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் அணியும் பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தின.

பெங்களூர் எம்.சின்னஸ்வாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன் படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 149 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக விராத் கோலி 41 ஓட்டங்களையும் மெயின் அலி 32 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள பந்து வீச்சில் றபடா 4 விக்கெட்களையும் கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 150 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

அவ்வணி சார்பாக ஷிரியாஸ் ஐயர் 67 ஓட்டங்களையும், ப்ரித்வி ஷா 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் நவடிப் சைனி 2 விக்கெட்களையும் மோயீன் அலி, பவான் நெஹி, டிம் சவுத்தி, மொஹமட் சிராஜ் ஆகியோர் தல ஒரு விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்த போட்டியில் பெற்ற வெற்றியினால் டெல்லி அணி 6 புள்ளிகளை பெற்றுள்ளது, அதேவேளை பெங்களூர் அணி விளையாடிய எந்த போட்டிகளிலும் வெற்றிபெறாமல் பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 4 =

*