;
Athirady Tamil News

ரஸலின் அதிரடிக்கு தடை போடுமா சென்னை? (படங்கள்)

0

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 23 ஆவது லீக் போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், தினேஷ் கார்த்திக் தல‍ைமையிலான கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் அணிக்கிடையிலும் இடம்பெறவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு 8.00 மணிக்கு ஆர்பமாகவுள்ளது.

இரு அணிகளுமே தலா 4 வெற்றி, 1 தோல்வியுடன் பலமான நிலையில் உள்ளன.

அத்துடன் இரு அணிகளுமே சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளன.

சென்னையில் ஹர்பஜன், ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர் ஆகியோரும், கொல்கத்தாவில் சுனில் நரைன், குல்தீப் யாதவ், பியுஷ் சாவ்லா ஆகியோரும் எதிரணி வீரர்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைவார்கள்.

குறிப்பாக கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக் காரர் ரஸல் கடைசி ஓவர்களில் எதிரணியின் பந்துவீச்சை சின்னாபின்னாமாக்கி தனது அணிக்கு வெற்றியைத் தேடி தருகிறார்.

எனினும் செந்தாக் கோட்டையில் சென்னையிடம் அவரின் அதிரடியாட்டம் எந்தளவுக்கு அமையும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சென்னை அணியில் காயமுற்ற பிராவோவுக்கு பதிலாக டூபிளெஸிஸ் சேர்க்கப்பட்டார். அவரும் இறுதிப் போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அடித்துக் காட்டினார்.

ஐ.பி.எல்.லில் இதுவரை இவ்விரு அணிகளும் 18 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 11 போட்டிகளிலும் கொல்கத்தா அணி 7 போட்டிளிலும் வெற்றிபெற்றுள்ளன.

‍அதேபோல் சேப்பாக்கத்தில் இவ்விரு அணிகளும் மோதி 8 போட்டிகளில் சென்னை அணி 6 போட்டிகளிலும், கொல்கத்தா அணி 2 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 1 =

*