;
Athirady Tamil News

என்னுடைய தவறு தான்… மன்னித்துவிடு: திருமண மேடையில் மணமகனின் கையை பிடித்து கண்ணீருடன் கெஞ்சிய காதலி..!!

0

சீனாவில் மணமகள் ஆடையில் வந்த பெண் ஒருவர், திருமணம் முடிந்த மணமகனின் கையை பிடித்துக்கொண்டு கெஞ்சிய சம்பவமானது அங்கிருந்த அனைவருக்கும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் மணமகன், மணமகளுக்கும் முத்தமிடும் நேரத்தில் திடீரென ஒரு பெண் மணப்பெண் ஆடையில் புகுந்துள்ளார்.

இதனை பார்த்து அங்கிருந்த அனைவரும் ஆச்சர்யமடைந்திருந்த வேளையில், நேரே மணமேடைக்கு சென்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்

அங்கிருந்த மணமகனின் கையை பிடித்து கொண்டு, என்னுடைய தவறு தான், மன்னித்துவிடு. என்னை திருமணம் செய்துகொள் என கண்ணீருடன் கெஞ்சியுள்ளார்.

இதனை பார்த்த மணமகள் கோபத்துடன் அங்கிருந்து கிளம்பிவிட்டார். இந்த வீடியோவானது முதலில் ஒரு வலைப்பக்கத்தில் மட்டும் பதிவிடப்பட்டிருந்தது.

அதன்பிறகு தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த வீடியோ கட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது

இதனை பார்த்த இணையதளவாசிகள் பலரும், காதலனை வேண்டாம் என தூக்கி எறிந்துவிட்டு, திருமண நேரத்தில் மீண்டும் வந்து தொந்தரவு செய்யும் அந்த பெண்ணிற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + 1 =

*