;
Athirady Tamil News

கெய்ல் – ராகுல் அதிரடியால் ஆடிப்போன மும்பை!! (படங்கள்)

0

ராகுல் மற்றும் கிறிஸ் கெய்லின் அதிரடியான ஆட்டத்தினால் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 197 ஓட்டங்களை குவித்துள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 24 ஆவது லீக் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே இன்று இரவு 8.00 மணிக்கு வான்கடே மைதானத்தில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் பொல்லார்ட் களத்தடுப்பை தேர்வு செய்ய பஞ்சாப் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

பஞ்சாப் அணி சார்பில் ராகுல் மற்றும் கெய்ல் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக கமிறங்கி தடுமாற்றத்துடன் நிதானமாக துடுப்பெடுத்தாடி முதல் நான்கு ஓவரில் 20 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

எனினும் இதற்கு அடுத்தபடியாக இருவரும் இணைந்து அதிரடி காட்ட மும்பை அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக அதிகரித்து.

குறிப்பாக 5 ஆவது ஓவரை எதிர்கொண்ட கிறிஸ் கெய்ல் 2,3 ஆவது பந்தில் அடுத்தடுத்து இரு ஆறு ஓட்டங்களையும், 5 ஆவது பந்தில் நான்கு ஓட்டத்தையும் இறுதிப் பந்தில் மேலும் ஒரு ஆறு ஓட்டத்தையும் விளாசித் தள்ளினார்.

இதையடுத்து 6 ஓவர்களில் முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 50 ஓட்டங்களை பெற்றது. ஆடுகளத்தில் ராகுல் 24 ஓட்டத்துடனும், கெய்ல் 26 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

10.2 ஆவது ஓவரில் கிறிஸ் கெய்ல் ஒரு ஆறு ஓட்டத்தை விளாச பஞ்சாப் அணி 100 ஓட்டங்களை பெற்றதுடன் கிறிஸ் கெய்லும் மொத்தமாக 31 பந்துகளை எதிர்கொண்டு 6 ஆறு ஓட்டம், 3 நான்கு ஓட்டம் அடங்களாக அரை சதம் கடந்தார்.

மறுமுணையில் கெய்லுக்கு தோள் கொடுத்து பக்கபலமாக ஆடிவந்த ராகுலும் 12.4 ஆவது ஓவரில் மொத்தமாக 41 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்களாக அரைசதம் பெற்றார்.

இந் நிலையில் 12.5 ஆவது ஓவரில் கிறிஸ் கெய்ல் 63 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அடுத்தடுத்து களம் நுழைந்த டேவிட் மில்லர் 14.6 ஆவது ஓவரில் 7 ஓட்டத்துடனும் கருன் நேயர் 16.5 ஆவது ஓவரில் 5 ஓட்டத்துடனும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பஞ்சாப் அணி 141 ஓட்டத்துக்கு 3 விக்கெட்டுக்களை இழந்தது.

அடுத்து களமிறிங்கிய சாம் கர்ரன் தான் எதிர்கொண்ட முதல் இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து நான்கு ஓட்டங்களை விளாசித் தள்ள பஞ்சாப் அணி 17.2 ஆவது ஓவரில் 150 ஓட்டங்களை பெற்றது. எனினும் சாம் கர்ரன் அடுத்த பந்தில் டீகொக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய மண்டீப் சிங்குடன் கைகோர்த்தா ராகுல் 19 ஆவது ஓவரை எதிர்கொண்டு முதல் பந்தில் 6 ஓட்டத்தையும், இரண்டாவது பந்தில் 4 ஓட்டத்தையும், 3,4 ஆவது பந்தில் அடுத்தடுத்து இரு ஆறு ஓட்டங்களையும் விளாசித் தள்ளினார்.

அதுமட்டுமன்றி இறுதி ஓவரையும் எதிர்கொண்ட ராகுல் முதல் பந்தில் மேலும் ஒரு 6 ஓட்டத்தை விளாசியதுடன் 19.4 ஆவது பந்தில் மொத்தமாக 63 பந்துகளை எதிர்கொண்டு சதத்தை பூர்த்தி செய்தார்.

இறுதியாக பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து ஓட்டங்களை 197 பெற்றது. இதனால் மும்பை அணியின் வெற்றிக்கு 198 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

பந்து வீச்சில் மும்பை அணி சார்பில் ஹர்த்தீக் பாண்டிய 2 விக்கெட்டுக்களையும், பும்ரா மற்றும் பெஹ்ரன்டர்ப் தலா ஒரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + seventeen =

*