;
Athirady Tamil News

டோனிக்கு 50 சதவீதம் அபராதம் !!

0

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 25 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

போட்டியின் கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 18 ஓட்டங்கள் தேவைப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் அந்த ஓவரை வீசினார். பரபரப்பாக வீசப்பட்ட அந்த ஓவரில் ஒரு பந்து இடுப்புக்கு மேல் வீசப்பட்டது. இது நோ பாலாக முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர், இல்லை என அறிவிக்கப்பட்டது.

இதை வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த டோனி, மைதானத்துக்குள் புகுந்து அந்த பந்தை நோ-பாலாக அறிவிக்கும்படி நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். ஆனால் அவரது கோரிக்கையை நடுவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். பின்னர், டோனியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

ஆடுகளத்தில் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக டோனிக்கு, போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடைசி பந்தில் வெற்றி பெற நான்கு ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை சிக்ஸருக்கு விளாசி சென்னை அணிக்கு சாண்ட்னர் வெற்றி தேடி தந்தார். இதன் மூலம் சென்னை அணி 6 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்தப் போட்டியில் டோனி 43 பந்துகளில் 58 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + three =

*