;
Athirady Tamil News

அறிவித்தல் பலகை திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!

0

காணியை துப்பரவு செய்யுமாறு அறிவுறுத்தி நடப்பட்டிருந்த அறிவித்தல் பலகை திருடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி சுகாதார பிரிவினரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரணி வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள தனியார் காணி ஒன்று டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான காரணிகள் காணப்படுவதாகவும் , அதனால் அக் காணியினை எதிர்வரும் 14 நாட்களுக்கு துப்பரவு செய்ய வேண்டுமென்றும் , தவறின் காணி உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறித்தி கடந்த 5ஆம் திகதி சாவகச்சேரி சுகாதார பகுதியினரால் காணியில் அறிவித்தல் பலகை பொருத்தப்பட்டது.

அந்நிலையில் குறித்த அறிவித்தல் பலகை காணியில் இல்லாமையால் , அரச சொத்து திருடப்பட்டுள்ளது என கொடிகாம பொலிஸ் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுகாதார பிரிவினர் முறைப்பாடு செய்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + twelve =

*