;
Athirady Tamil News

வலிகாமம் உதைப்பந்தாட்ட லீக்கு சித்தார்த்தன் எம்பி உதவி.!! (படங்கள்)

0

வலிகாமம் உதைப்பந்தாட்ட லீக்கில் அங்கத்துவம் வகிக்கின்ற 46 கழகங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனால் சுமார் பத்து லட்சம் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. உடுவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வலிகாமம் உதைப்பந்தாட்ட லீக்கின் தலைவர் யுவறாஜ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், உடுவில் பிரதேச செயலர் மற்றும் இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தின் உப செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் பத்து லட்சம் ரூபா நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்கள், கழகங்களுக்கான சீருடைகள், போட்டி நடுவர்களுக்கான நவீன தொடர்பாடல் சாதனங்கள் என்பனவும் வழங்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × three =

*