;
Athirady Tamil News

யாழில் இசையரங்கம் 21ஆம் திகதி!!

0

குரலோசை நுண்கலைகளின் தாயகம் என்கின்ற கலை நிறுவனத்தினது ஏற்பாட்டிலே சங்கப் புதல்வர் பூதன்தேவனாரில் இருந்து தற்காலம் வரை பாடல்களை எழுதிய கவிராயர்களில் 100 பாடல்களை தெரிவு செய்து அவற்றிற்கு இசை வடிவம் கொடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக அதற்கான பயிற்சிகளை வழங்கி என்னுடைய 9 மாணவர்களும் நானும் சேர்ந்து ஈழத்தின் தமிழ் இசை என்கின்ற பெயரிலே 21 ஆம் திகதி அரங்கேற்றவுள்ளோம். என்று விரிவுரையாளர் றொபேர்ட் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (15) மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கும் போது
இந்த நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி யாழ். இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி கலையரங்கிலே காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்விலே சங்கப்புதல்வர் பூதன்தேவனார்-சுவாமிவிபுலானந்தர்-ஆறுமுகநாவலர்-யோகர் சுவாமிகள-;வினாசித்தம்பிப்புலவர்-வீரமணிஜயர்-பொன்னாலை சிவகுருநாதர் போன்ற கவிராயர்கள் அதைவிட கல்லடிவேலுப்பிள்ளை- பொன்னாலை வரகவிகிருஷ்ணபிள்ளை- கல்லடி வேலுப்பிள்ளையுடன் சேர்ந்து ஈழத்தினுடைய புகழ்பூத்த கவிஞர்களான மகாகவி- உருத்திரமூர்த்தி- கவிஞர் நீலாவணன் போன்ற கவிஞர்களுடைய பாடல்களும் இங்கே இணைக்கப்பட்டு கவிஞர் முருகையனுடைய கவிதைகளும் இசையூட்டம் பெற்று 100 பாடல்களாக தெரிவு செய்து நாங்கள் இந்த அரங்கேற்றத்தை நிகழ்த்த இருக்கிறோம்.

ஈழத்தினுடைய இசைத்துறை அல்லது கலைத்துறை வரலாற்றிலே ஈழத்தின் தமிழ் இசை என்கின்ற கருத்தியல் ஒரு செயல் வடிவம் பெறுவது இதுவே முதல் தடவை என்பதால் இந்த நிகழ்வுக்கு அனைவரும் ஆதரவு தந்து கண்டுகழிக்க வேண்டும் என நாங்கள் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

100 பாடல்களை இசைப்பதற்கான காரணம் ஈழமணி திருநாட்டிலே எங்களுக்கென்று ஒரு இசைப் பாரம்பரியம் மொழிப் பாரம்பரியம் பண்பாடு இருக்கிறது என்பதை இந்த உலகுக்கு மிக அழுத்தம் திருத்தமாகச் சொல்வதற்காகத் தான் நாங்கள் இந்த 100 பாடல்களை ஒரு தடவையிலே இசைக்கின்றோம்.

இந்த நிகழ்வு 21 நிகழ்வுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 21 நிகழ்விலும் 100 பாடல்கள் இடம்பெறும். அத்துடன் நிகழ்வுக்கு வருகின்ற ரசிகர்களை உரியமுறையில் அனுசரித்து அவர்களுக்கு உணவு வழங்கி இந்த நிகழ்வை சோராத வகையிலே ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த நிகழ்விலே இடம்பெற இருக்கின்ற 100 பாடல்களிலே 7 பாடல்கள் கடந்த காலத்தில் இசைப்பணியாற்றிய இசையாளர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. சங்கீதபூசணம் பாலசிங்கம் – சங்கீதபூசணம் திலகநாயகம் போல் – பொன்சிறீ வாமதேவன் – சாரதா பரஞ்சோதி போன்றவர்களுடைய இசை அமைப்பில் உருவாக்கப்பட்டது. மிகுதி அத்தனை பாடல்களும் என்னால் இசையமைக்கப்பட்டு என்னாலும் என்னுடைய மாணவர்களாலும் பாடப்பட்ட பாடல்கள். இந்த நிகழ்வுக்காக 60 பாடல்கள் புதிதாக இசையாக்கம் பெற்றுள்ளன.

10 பாடகர்கள் என்னுடன் இணைந்து 9 மாணவர்கள் பாடகர்கள். 26 கலைஞர்கள் பக்கவாத்திய கலைஞர்கள் பங்குபற்றுகின்றனர். தன்னுமைவேந்தன் மா.சிதம்பரநாதன் அவர்களில் இருந்து தற்காலம் வரை உள்ள அறிமுகமாகிய கலைஞர்கள் வரை பலர் மிருதங்கம் வாசிக்கிறார்கள். வயலின் ஜெயராமன் – கோபிதாஸ் – குகவரன் – பிரபினா – சியாம் – வேலதீபன் போன்றவர்கள் பங்குபற்றுகிறார்கள்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + eight =

*