;
Athirady Tamil News

பணிப்புறக்கணிக்கும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள். !! (படங்கள்)

0

நாளைய தினம் நாடு முழுவதும் உத்தேச அடையாள வேலை நிறுத்தம் மற்றும் புதுவருடப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுவரை காலமும் முறையான நியமனக்கடிதங்கள் எதுவும் அற்ற நிலையில் நிர்வாக குழப்பங்களுக்கு உள்ளாகியிருந்த சமுர்த்தி அபிவருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு தீர்வாக பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட 2019/03 இலக்க சுற்றுநிருபம் உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கின்றது எனவும் அதனால் குறித்த சுற்றுநிருபத்தினை நடைமுறைப்படுத்த வேண்டாம் என கோரியே பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை முதல் எதிர்வரும் 29 ம் திகதிவரை திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்படும் புத்தாண்டு சேமிப்பு வேலைத்திட்டத்தினையும் புறக்கணிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிப்புறக்கணிப்புக்கு யாழ்மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக அதன் தலைவர் செந்தூரன் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − two =

*