;
Athirady Tamil News

வவுனியா இந்து ஆலய ஓன்றிய தலைவருக்கு அச்சுறுத்தல்!!

0

இந்து ஆலய ஓன்றிய தலைவருக்கு அச்சுறுத்தல் விடுத்த வவுனியா தெற்கு தமிழ் பிரதேசபை தவிசாளர்

சிவன் பிச்சை பாத்திரம் ஏந்தினார் என்றும், திருக்கேதீச்சரத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கும் போது தவறு புரிந்தவர்களுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் பேசியதை கண்டித்தும் இந்து ஆலய ஒன்றியம் கண்டனங்களை தெரிவித்தமை தவறு என்றும், மாட்டிறைச்சி தின்று விட்டு நாங்கள் வந்தாலும் நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் இந்து ஆலயங்களின் ஒன்றிய தலைவர் மீது தாக்குதல் நடத்த முயன்றதுடன், அச்சுறுத்தல் விடுத்ததாக வவுனியா பொலிசில் முறைப்பாடு ஓன்று செய்யப்பட்டுள்ளது.

இந்து ஆலயங்களின் ஒன்றிய தலைவர் துசியந்தன் தனது கடமை ஒன்றினை நிறைவேற்றிக் கொள்வதற்காக நேற்று மாலை வவுனியா மாவட்ட செயலகம் சென்ற பொழுது அங்கு தவிசாளர் வந்த நிலையிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருக்கேதீஸ்வர ஆலய வளைவினை கிறிஸ்தவ விசமிகள் உடைத்ததன் எதிரொலியாக வவுனியாவில் கண்டன அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றிய தலைவர் தலைமையில் நடைபெற்றதாகவும் இதில் கலந்துகொண்ட சிவசேனை அமைப்பின் தலைவர் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை கடுமையாக விமர்சித்ததாகவும் அறிய முடிகின்றது.

அதன் எதிரொலியாக வவுனியா மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களின் விஷேட நிகழ்வுகளில் அதிதிகளாக வேற்று மதத்தவர்களை அழைப்பதில்லை எனவும் இவ்வாறு ஏனைய மதங்களிலும் அழைக்கும் வழக்கம் இல்லை என்பதாலும் இவை இந்துக்களின் வைதீக, ஆகம நம்பிக்கைகளை சிதறடிப்பதால் வேற்று மதத்தவர்களுக்கு பதிலாக அவர்களின் கட்சியை சேர்ந்த இந்து பிரதிநிதி கலந்து கொள்ளலாம் எனவும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

எனினும் அதனை மீறி குறித்த தவிசாளரின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இந்து ஆலயம் ஒன்றின் நிழ்வில் கலந்து கொண்டிருந்தார். இது தொடர்பில் இந்து ஆலயங்களின் ஒன்றிய தலைவர் துசியந்தன் தனது கடுமையான கண்டனங்களை தெரிவித்து தனது முகநூலில் எழுதி வந்த நிலையில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் இந்து ஆலயங்களின் ஒன்றிய தலைவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மேலும் இச் சம்பவம் தொடர்பாக சைவ சமய உயர் பீடங்களிற்கும், இந்து சமய விவகார அமைச்சுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − seven =

*