;
Athirady Tamil News

யாழ் சின்மயா மிஷன் வழங்கும் ஞானவேள்வி ( யக்ஞம்)!! (படங்கள்)

0

எதிர்வரும்25.04.2019 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் மாலை,6.30 மணி முதல் 9.00மணிவரை நல்லூர் ஆலய மேற்கு வீதியில் அமைந்துள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன மண்டபத்தில் யாழ்.சின்மயா மிஷனால் ஞா ன வேள்வி நடத்தப்படவுள்ளது.

இன் நிகழ்வில் இலங்கை சின்மயா மிஷனின் கொழும்புக்கிளை சுவாமி குணாதீதானந்த சரஸ்வதி அவர்களால் பகவான் ஆதிசங்கரரால் அருளிச்செய்யப்பட்ட பஜகோவிந்தம் எனும் நூலை அடிப்படையாகக்கொண்டு உன்னை அறிந்தால் உலகில் வாழலாம் எனும் தலைப்பில் ஞா ன வேள்வி நடாத்த உள்ளார் . அத்துடன் 25.04.2019 ஆம் திகதி முதல் 28.04.2019 திகதி வரை காலை 6.30 மணி முதல் 7.30மணி வரை இல 9 செட்டித்தெரு ஒழுங்கையில் அமைந்துள்ள யாழ் சின்மயாமிஷன் ஆச்சிரமத்தில் அம்ருதபிந்து உபநிஷத் விளக்கவுரை வகுப்பு நடைபெறவுள்ளது.
இவ் இரு நிகழ்வுகளிலும் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × three =

*