;
Athirady Tamil News

நாவலபிட்டி கலபொட ஆற்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!! (படங்கள்)

0

நாவலபிட்டி கலபொட ஆற்றின் ஆழமான பகுதியில் இருந்து இளைஞன் ஒருவனின் சடலம் மீட்கபட்டுள்ளதாக நாவலபிட்டடி பொலிஸார் தெரிவித்தனர் இந்த சடலம் 19.04.2019.வெள்ளிகிழமை காலை 10.30மணி அளவில் கடல்பாடையினரின் உதவியோடு மீட்கபட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

கம்பள போவள பகுதியை சேர்ந்த 18வயதுடைய துhஷார பிரதீப் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கபட்டதாகவூம் கம்பளை விக்ரபாகு வித்தியாளயத்தில் உயர் தரத்தில் கல்வி பயின்று வரும் குறித்த இளைஞன் தனியார் வகுப்பிற்கு செல்வதாக கூறி தனது காதலியோடு நாவலபிட்டி பகுதிக்கு சுற்றுலாவை மேற்கொண்ட போது குறித்த இளைஞனின் பாதணி ஆற்றில் விழுந்ததாகவூம் பாதணியை எடுப்பதற்கு முற்பட்டபோதே ஆற்றில் தவறி விழுந்துள்ளதாக பொலிஸாருக்கு குறித்த இளைஞனின் காதலியிடம் இருந்து வாக்குமுலம் பெறபட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேலை இளைஞனும் அவரின் காதலியூம் காலபொட ஆற்றில் நீராடி கொண்டிருந்தவேலை இளைஞனை நீர் ஆழமான பகுதிக்கு அல்லுன்டு சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர் சடலமாக மீட்கபட்ட இளைஞனின் சடலம் நாவலபிட்டி நீதவான் தலைமையில் மரண விசாரனைகள் இடம்பெற்றவூடன் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக சடலம் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு பிரேத பரீசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கபட உள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − 6 =

*