;
Athirady Tamil News

வவுனியாவில் இளங்கோ அடிகள் நினைவு நாள் அனுஸ்டிப்பு!! (படங்கள்)

0

வவுனியாவில் இளங்கோ அடிகளாரின் நினைவு நாள் இன்று (19) தமிழ் மணி அகளங்கன் தலைமையில் நடைபெற்றது.
சித்திரை முழுநிலா தினமான இன்று வவுனியா கோவில்குளம், சிவன்கோவிலுக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இளங்கோ அடிகளாரின் சிலையருகில் அவரது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நடைபெற்றதுடன், அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு அதிதிகளால் மாலை அணிவிக்கப்பட்டதுடன் இந்து அன்பக சிறுவர்களால் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ் மணி அகளங்களால் இளங்கோ அடிகளார் தொடர்பான நினைவுப் பேருரை ஆற்றப்பட்டது.

இந்நிகழ்வில் உபநகரபிதா சு.குமாரசாமி, நகரசபை உறுப்பினர்களான, க.சந்திரகுலசிங்கம், நா.சேனாதிராஜா, தமிழருவி த.சிவகுமாரன், சமூக சேவையாளர் எஸ்.சந்திரகுமார் (கண்ணன்), சிவன் கோவில் நிர்வாகத்தினர், சிவன் கோவில் இந்து அன்பக சிறுவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − one =

*