;
Athirady Tamil News

2000ம் மில்லிகராம் எரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது!! (படங்கள்)

0

அட்டன் காமினிபுர பகுதியில் வீடு ஒன்றில் இருந்து 2000ம் மில்லிகராம் எரோயின் போதை பொருளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யபட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர் இந்த கைது சம்பவம் 19.04.2019.வெள்ளிகிழமை மாலை 05மணி அளவில் இடம்பெற்றதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அட்டன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அட்டன் பொலிஸாரினால் மேற்கொள்ளபட்ட சுற்றிவலைப்பின் போது குறித்த சந்தேக நபரிடம் இருந்து 2000ம் மில்லிகிராம் எரோயின் மீட்கபட்டுள்ளதோடு குறித்த சந்தேக நபர் கைது செய்யபட்டுள்ளதாகவூம் இந்த நபர் குறித்த பகுதியில் விற்பனைக்காக வைக்கபட்டிருந்தாகவூம் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யபட்ட சந்தேக நபரை 20.04.2019.சனிகிழமை அட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தபட உள்ளதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர் எனவே சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − eleven =

*