;
Athirady Tamil News

வல்வையில் வாள்வெட்டு: 8 பேர் காயம்!!

0

கம்பர்மலை முத்துமாரி அம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டால் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற வாள்வெட்டு மோதலில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்றிரவு இடம்பெற்றது. சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

“வடமராட்சி கம்பர்மலை முத்துமாரி அம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் இரண்டு தரப்புகளுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறியதில் 8 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஊரனி மற்றும் மந்திகை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்” என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + 9 =

*