;
Athirady Tamil News

உ.பி.யின் கான்பூரில் ஹவுரா-டெல்லி பூர்வா எக்ஸ்பிரசின் 5 பெட்டிகள் தடம்புரண்டது..!!

0

ஹவுராவில் இருந்து புதுடெல்லி நோக்கி செல்லும் விரைவு ரெயிலான பூர்வா எக்ஸ்பிரஸ் நேற்று புறப்பட்டது. இந்த ரெயில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூரை இன்று அதிகாலை ஒரு மணிக்கு அடைந்தது.

அப்போது ரெயிலின் 5 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. நள்ளிரவில் பயணிகள் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் அலறினர்.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காயமடைந்த 5 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + four =

*