;
Athirady Tamil News

மம்தாவுக்காக வெளிநாட்டினர் இங்கு தேர்தல் பிரசாரம் செய்வது வெட்கக்கேடு – மோடி..!!

0

பாராளுமன்ற தேர்தலையொட்டி மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள புனியாட்பூரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்த மோடி, மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் இங்குள்ள மக்களை வந்தடையாதவாறு உங்கள் முதல் மந்திரி தடைக்கல்லாக இருந்து வருகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.

மாநிலத்தின் பல பகுதிகளில் பாஜக தொண்டர்களுக்கு எதிரான அராஜகத்தை மம்தா கட்டவிழ்த்து விடுவதாக குறிப்பிட்ட அவர், குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என எச்சரித்தார்.

மேலும், அண்டைநாடான வங்காளதேசத்தில் மிகவும் பிரபலமான நடிகர்கள் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ததை சுட்டிக்காட்டிய மோடி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக வெளிநாட்டினர் இங்கு வந்து தேர்தல் பிரசாரம் செய்வது வெட்கக்கேடானது என்றும் குறிப்பிட்டார்.

இங்கு நடந்து முடிந்த இருகட்ட வாக்குப்பதிவால் மம்தா தூக்கத்தை தொலைத்து தவிக்கிறார். எனவே, வெளிநாட்டில் பிரபலமானவர்களை வைத்து சிறுபான்மையினத்தவர்களின் ஓட்டுகளை கவர்ந்து விடலாம் என்ற கற்பனையில் மம்தா மிதக்கிறார் என்றும் மோடி தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − six =

*