;
Athirady Tamil News

பெய்த அடைமழையில் சூரியகாந்தி தோட்ட குடியிருப்புகளில் நீர் உட்புகுந்தது.!! (படங்கள்)

0

மழை இல்லை இல்லை என கூறினாலும் ஒரு சில இடங்களில் பாரிய அளவு மழை அவ்வப்போது பெய்துக்கொண்டுதான் இருக்கின்றது.30 நிமிடம் மழை பெய்தாலும் அதன் தாக்கம் பல்வேறு இடங்களில் பல அசௌகரியங்களை ஏற்படுத்தி வருகின்றது.அந்தவரிசையில் வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட சூரியகாந்தி தோட்ட இல.02ம் லயன் குடியிருப்பில் நீர் உட்புகுந்து மக்களுக்கு அசௌகரியமான சூழ்நிலையை எதிர் நோக்கியுள்ளது.

மாலை 2 மணியளவில் பெய்த அடைமழையின் போதே நீர் இவ்வாறு உட்புகுந்துள்ளது.ஆரம்பத்திலிருந்து தோட்ட நிர்வாகத்திடமும் அரசியல்வாதிகளிடமும் குடியிருப்பின் நிலை பற்றி அறிவித்தும் இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. அதன்விளைவால் இன்று நீர் உட்புகுந்துள்ளதாக சூரியகாந்தி தோட்ட இல.02 ம் லயன் குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × four =

*