;
Athirady Tamil News

அனைவரையும் கொல்லப்போகிறோம்: திருமண நாளை கொண்டாட சென்ற பிரித்தானிய தம்பதியின் திக் திக் நிமிடங்கள்..!!

0

பிரித்தானியாவின் Markfield பகுதியில் வசித்து வந்த தம்பதியினர் தங்களது முதல் திருமண நாளை கொண்டாட பெரு நாட்டிற்கு சென்ற இடத்தில் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டுள்ளனர்.

ஆத்தீஷ் வதேர் – ஜெஸ்ப்ரீத் தம்பதியினர் தங்களது முதல் திருமண நாளை கொண்டாடுவதற்காக பெரு நாட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு சுற்றுலா பேருந்தில் பயணித்துக்கொண்ருக்கையில், ஆறு ஆயுதம் ஏந்திய கொடூரமான கும்பல் சுற்றுலா பேருந்தை சுற்றி வளைத்தனர். அதில் ஒரு நபர், உங்கள் அனைவரையும் கொல்லப்போகிறோம், உங்களிடம் இருக்கும் பொருட்களையும் எடுத்துக்கொள்ளப்போகிறோம் என உரக்க கத்தியுள்ளார்.

துப்பாக்கியை சுற்றுலா பயணிகளின் தலையில் வைத்து, உங்களிடம் இருக்கும் பொருட்களை கொடுத்துவிடுங்கள் என அவர்கள் மிரட்டியுள்ளனர். அந்த பேருந்தில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 22 சுற்றுலா பயணிகள் இருந்துள்ளனர்.

திக் நிமிடங்கள் குறித்து ஆத்தீஷ் கூறியதாவது, எனது மனைவியை துப்பாக்கி முனையில் வைத்து என்னிடம் இருந்த பொருட்களை கேட்டான். ஆனால் நான் கையில் எதுவும் வைத்திருக்கவில்லை.

அனைத்தையும் சீட்டுக்கு அடியில் வைத்திருந்தேன். சில நிமிடங்கள் எங்கள் உடல் நடுங்கியது. திருடர்கள் எங்களை சுட்டுக்கொன்றுவிடுவார்களோ என்று அச்சம் கொண்ட சுற்றுலா வழிகாட்டி, உங்களுக்கு வேண்டுமான பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் யாரையும் சுட்டுக்கொன்றுவிட வேண்டாம் என அவர்களிடம் பேசினார்.

பயணிகள் தங்கள் கையில் இருந்த கடிகாரங்கள், கமெராக்களை கொடுத்தனர். அதனை வாங்கிகொண்டு அவர்கள் சென்றுவிட்டார்கள். அதன்பின்னர் ஒருவழியாக சுற்றுலாவை முடித்துக்கொண்டு அங்கிருந்து திரும்பினோம் என பகிர்ந்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 5 =

*