;
Athirady Tamil News

மூன்றாம் நெப்போலியன் பிறந்த தினம்: ஏப்.20- 1808..!!

0

மூன்றாம் நெப்போலியன் (Napoleon III), அல்லது லூயி நெப்போலியன் பொனபார்ட் (Louis-Napoleon Bonaparte, ஏப்ரல் 20, 1808 – ஜனவரி 9, 1873) என்பவர் பிரெஞ்சுக் குடியரசின் முதலாவது தலைவனாகவும், இரண்டாவது பிரெஞ்சுப் பேரரசின் ஒரேயொரு பேரரசனாகவும் இருந்தவர்.

மூன்றாம் நெப்போலியன், முதலாம் நெப்போலியன் என்ற நெப்போலியன் பொனபார்ட் பேரரசனின் சகோதரனான லூயி பொனபார்ட்டின் மகனாவார். முதலாம் நெப்போலியனின் ஆட்சிக் காலத்தில் லூயி நெப்போலியனின் தந்தை பிரான்சின் ஒரு பகுதிக்கு அரசனாக்கப்பட்டார். 1815-ல் முதலாம் நெப்போலியனின் கடைசித் தோல்வியை அடுத்து நெப்போலியன் குடும்பம் முழுவது நாடு கடத்தப்பட்டனர். சிறுவனான லூயி நெப்போலியன் சுவிட்சர்லாந்தில் அவனது தாயாரால் வளர்க்கப்பட்டு பின்னர் ஜெர்மனி கல்விகற்க அனுப்பப்பட்டார். இளம் வயதில் இத்தாலிக்கு அவனது தமையன் நெப்போலியன் லூயியுடன் வசித்தார். அங்கு அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டு வடக்கு இத்தாலியை ஆக்கிரமித்திருந்த ஆஸ்திரியாவை எதிர்த்த இயக்கத்தில் இணைந்து போராடினார்.

அக்டோபர் 1836-ல் பிரான்சுக்கு ரகசியமாகத் திரும்பி அரசுக்கெதிரான புரட்சிக்குத் தலைமை தாங்கினார். ஆனாலும் அவனது முயற்சி தோல்வியடையவே அவன் ரகசியமாக ஐக்கிய அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்று அங்கு 4 ஆண்டுகள் நியூயார்க்கில் வசித்தார். பின்னர் மீண்டும் ஆகஸ்ட் 1840-ல் சில கூலிப் படைகளுடன் நாடு திரும்பினார். இம்முறை அவன் கைது செய்யப்பட்டு அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். 1846-ல் அவன் சிறையிலிருந்து தப்பி இங்கிலாந்தின் சவுத்போர்ட் நகருக்கு குடியேறினார். அங்கு கட்டிடத் தொழிலாளி போல வேடமணிந்து வாழ்ந்தார். ஒரு மாதத்தின்
பின்னர் அவனது தந்தை இறக்கவே பிரான்சின் முடிக்கு நேரடி வாரிசானார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1859 – சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய இரண்டு நகரங்களின் கதை புதினம் வெளியிடப்பட்டது. * 1862 – லூயி பாஸ்டர் மற்றும் குளோட் பெர்னார்ட் ஆகியோரின் பாஸ்ச்சரைசேஷன் முறையை முதன் முதலாக சோதித்தனர். * 1902 – பியேர், மற்றும் மேரி கியூரி ரேடியம் குளோரட்டைத் தூய்மைப்படுத்தினர். * 1914 – ஐக்கிய அமெரிக்காவில் கொலராடோவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் போது காவல்துறையினர் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பேர் கொல்லப்பட்டனர். * 1926 – திரைப்படத்துக்கு ஒலியை இணைக்கும் வைட்டாபோன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது. * 1945 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்க படைகள் ஜெர்மனியின் லெயிப்சிக் நகரைக் கைப்பற்றினர். ஆனாலும் அடுத்த நாளே இதனை சோவியத் ஒன்றியத்துக்கு அளித்தனர்.

* 1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் லெய்ப்சிக் நகரத் தந்தை தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். * 1945 – அடொல்ஃப் ஹிட்லர் கடைசித் தடவையாக தனது சுரங்க பதுங்கு இருப்பிடத்தில் இருந்து வெளியே வந்தார். * 1961 – கியூபாவில் ஐக்கிய அமெரிக்காவின் பிக்ஸ் விரிகுடாத் தாக்குதல் தோல்வியில் முடிந்தது. * 1967 – சைப்பிரசில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 126 பேர் கொல்லப்பட்டனர். * 1968 – தென்னாபிரிக்க விமானம் ஒன்று தென்மேற்கு ஆப்பிரிக்காவில் வீழ்ந்ததில் 122 பேர் கொல்லப்பட்டனர். * 1972 – அப்போலோ 16 சந்திரனில் இறங்கியது. * 1978 – தென் கொரியப் பயணிகள் விமானம் சோவியத் ஒன்றியத்தினால் சுடப்பட்டதில் இரு பயணிகள் கொல்லப்பட்டனர். 107 பேர் தப்பினர்.

* 1998 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 53 பேர் கொல்லப்பட்டனர். * 1998 – 28 ஆண்டுகள் இயங்கிய ஜெர்மனியின் சிவப்பு ராணுவ அமைப்பு என்ற பயங்கரவாத அமைப்பு கலைக்கப்பட்டது. * 1999 – கொலராடோவில் உயர்தரப் பள்ளி ஒன்றில் இடம்பெற்ற துப்பக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். * 2007 – டெக்சாசில் ஹூஸ்டன் நகரில் உள்ள நாசாவின் விண்வெளி ஆய்வு மையத்தின் பணியாளி ஒருவன் பணயக் கைதி ஒருவரைக் கொன்று தன்னையும் சுட்டுக் கொன்றான்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + eight =

*