;
Athirady Tamil News

வவுனியாவில் புளொட் அமைப்பின் மத்திய குழு கூட்டம்!! (படங்கள்)

0

தமிழீழ விடுதலைக் கழகத்தின் மத்திய குழு கூட்டம் தெற்கிலுப்பைகுளத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகமான அறிவகத்தில் இன்று (21) நடைபெற்று வருகிறது.

புளொட் அமைப்பின் தலைவரும் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான த.சித்தார்தன் தலைமையில் நடைபெற்று வரும் குறித்த கலந்துரையாடலில் முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் க. சிவநேசன், நகரசபை உறுப்பினர்களான க.சந்திரகுலசிங்கம், சு.காண்டீபன், பிரதேசசபை உறுப்பினர்களான சிவம், குகதாசன், யோகன், கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்பாக கொழும்பு, மற்றும் மட்டகளப்பில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் உட்பட விடுதலை போரில் உயிர்நீத்தவர்களிற்கு இரு நிமிடமௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 11 =

*