;
Athirady Tamil News

வெடிப்புச் சம்பவங்கள் குறித்து பிரதமரின் நிலைப்பாடு!! ( வீடியோ)

0

இன்று காலை சில இடங்களில் ஏற்பட்ட குண்டு வெடிப்புக்கள் காரணமாக உயிரிழந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தவர்களுக்கும் காயத்திற்குள்ளான அனைவருக்கும் அரசாங்கத்தின் சார்பில் கவலையைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்த நாசகார செயற்பாடுகள் நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் குழைக்கும் பாரிய செயற்பாடுகளென நான் கருதுகின்றேன்.

முக்கியமாக மத ஸ்தலங்கள் மற்றும் பிரதான ஹோட்டல்கள் சிலதை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல்களை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். சட்டத்தைப் பாதுகாப்பதற்கு நாம் அனைவரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நான் பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு தேவையான பணிப்புரைகளை விடுத்துள்ளேன்.

நானும் ஏனைய அமைச்சர்களும் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் சம்பந்தமாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடினோம். இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர், சட்ட மா அதிபர், நிதியமைச்சின் செயலாளர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஆகியோர் பங்குபற்றினர்.

இந்த நிகழ்வுகள் பற்றி தற்போது நடைபெறும் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய நபர்களின் தராதரம் பாராது அவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமெனத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

இலங்கையர்களான நாம் அனைவரும் நாட்டின் இந்த பிரச்சினைக்குரிய நிலைமையில் பொறுமையாக நடவடிக்கை மேற்கொண்டு சமாதானத்தைப் பாதுகாப்போம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





இலங்கை குண்டுவெடிப்புக்கு 6 டன் வெடிமருந்து.. பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ்…!! (படங்கள்)

இலங்கை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது எப்படி?.. பதிவான சம்பவம்.. ஷாக்கிங்.!! (வீடியோ)

தேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு!! (படங்கள், வீடியோ)

விமான நிலையத்திற்கு செல்ல அனுமதி இல்லை!!

குண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர் வைத்தியசாலையில்!!

ஆறு வெடிப்பு சம்பவங்களில் 129 பேர் பலி!! (படங்கள், வீடியோ)

மஹிந்த கொச்சிக்கடைக்கு விஜயம்!! (படங்கள், வீடியோ)

இலங்கை குண்டுவெடிப்பு – குறைந்தது 100 பேர் உயிரிழப்பு, 200 பேர் காயம்!! (படங்கள், வீடியோ)

கிறிஸ்தவ ஆலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு.!! (படங்கள், வீடியோ)

குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம் கண்டனம்.!! (படங்கள்)

மட்டக்களப்பு தேவாலய குண்டுவெடிப்பு – 25 ற்கும் மேற்பட்டோர் பலி..!! (வீடியோ, படங்கள்)

நாட்டை உலுக்கிய பல்வேறு தொடர் வெடிப்பு சம்பவங்கள்!! (படங்கள், வீடியோ)

ஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ; இதுவரை 10 பேர் பலி!! (படங்கள், வீடியோ)

இரு தேவாலயத்தில் பாரிய குண்டு வெடிப்பு : பலர் பலி, பலர் காயம்!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − eleven =

*