;
Athirady Tamil News

என்னுடைய சகோதரன் கிடைக்கும் வரை தினமும் அங்கு செல்வேன்.. சகோதரியின் நெஞ்சை உருக்கும் வார்த்தைகள்..!!

0

இங்கிலாந்தில் காணாமல் போன தன்னுடைய சகோதனை கண்டுபிடித்து தருமாறு அவருடைய சகோதரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த அலெக்ஸ் ஜான்சன் (24) என்கிற நபர் கடந்த செவ்வாய்க்கிழமை டைன் பாலதிற்கு சென்ற பொழுது மாயமாகியிருக்கிறார்.

இதுகுறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், அலெக்ஸ் பாலத்திலிருந்து கீழே இருக்கும் நதியில் விழுந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர். அவரை தேடும் பணியில் பொலிஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அவருடைய சகோதரி அசுலே மார், நான் என்னுடைய சகோதரனை கண்டுபிடிக்கும் வரை தினமும் அந்த நதிக்கு செல்வேன்.அலெக்ஸ் அறிந்தவர்கள் ஒன்றாக வரவில்லை என்றாலும் இந்த தேடலில் எங்களுக்கு உதவுங்கள்.

அந்த இருண்ட நதியில் இருந்து அவரை வெளியேற்றவும், அவரை வெளிச்சத்திற்கு கொண்டு வரவும் மிகவும் ஆவலாக உள்ளோம். அவரை வீட்டிற்கு கொண்டு வர இதுதான் நேரம்

டைன் பாலத்திலிருந்து பிளேடன் வரை இந்த பகுதி மிகவும் பரவலானது என நம்பப்படுகிறது. நதி இருள், குளிர் மற்றும் அழுக்கு நிறைந்தது.

இங்கிருந்து எங்களுடைய அலெக்ஸை மீட்டெடுக்க எங்களுக்கு உதவுங்கள். அவர் அங்கே இருக்கக்கூடாது என நாங்கள் நினைக்கிறோம் எனகூறியுள்ளார்.

அலெக்ஸ் குறித்த எந்த தகவலும் தெரிந்தால் உடனடியாக எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 2 =

*