;
Athirady Tamil News

ஜேர்மனியில் ஒரு வித்தியாசமான தடை: நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்கும் ஒரு நற்செயல்..!!

0

புனித வெள்ளி பண்டிகையின்போது ஜேர்மனியில் நடனம் ஆடுவதற்கு தடை விதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

பவேரியாவில் மதுபான விடுதிகளில் இசை ஒலிப்பதற்கு கூட தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிராங்பர்ட்டில் பார்ட்டி அமைப்பாளர்கள்,பார்ட்டி ஏற்பாடு செய்தால் அவர்களுக்கு 1000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.

பெர்லினில் புனித வெள்ளி அன்று, காலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடனம் ஆடுவது சட்ட விரோதம் ஆகும்.கிறிஸ்தர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது

கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி மற்றும் அதையடுத்து வரும் சனிக்கிழமைகளில் துக்கம் அனுஷ்டிப்பதால் அவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இதைச் செய்கிறோம் என பிரபல பெர்லின் தேவாலயம் ஒன்றின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

நடனம் ஆடுவதுடன், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் சூதாட்டம் போன்ற நிகழ்வுகளுக்கு கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியைப் பொருத்தவரையில், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் கிறிஸ்தவர்கள் என்றாலும், ஜேர்மனியின் வெவ்வேறு பகுதிகளைப் பொருத்து மதத்தினரும் மாறுபடுகிறார்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − eighteen =

*