;
Athirady Tamil News

நடு ரோட்டில் இன்னொரு பெண்ணுடன் பிடிபட்ட கணவன்: நிறைமாத கர்ப்பிணி மனைவி அதிரடி..!!

0

கொலம்பியாவில் நடு ரோட்டின் இன்னொரு பெண்ணுடன் கையும் களவுமாக சிக்கிய கணவனை ரோட்டில் வைத்தே பளாரென அறைந்தார் நிறைமாத கர்ப்பிணியாகிய அவரது மனைவி.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் தனது கணவன் இன்னொரு பெண்ணுடன் கார் ஒன்றில் இருப்பதை அறிந்த அந்த மனைவி, காரை நிறுத்தி கணவனை இறங்கச் சொல்கிறார்.

அந்த கணவன் மறுக்கவே, கதவை வலுக்கட்டாயமாக திறந்து அவரை கீழே இறக்குகிறார். அவரிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போதே அவருடன் வந்த பெண் காரில் தப்பிப் போகிறார்

கீழே இறங்கிய கணவனிடம் நிறைமாத கர்ப்பிணியாகிய அந்த மனைவி விளக்கம் கேட்க, அவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

நடு ரோட்டில் வைத்து கோபத்தில் பளாரென கணவனை கன்னத்தில் அறைகிறார் அந்தப் பெண். சண்டையை விலக்க வந்த ஒரு நபர் மீது கோபத்தைக் காட்டும் அந்த கணவர் அவரை மிதிக்க முயல்வதுடன் வீடியோ முடிவடைகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 13 =

*