;
Athirady Tamil News

இலங்கை குண்டுவெடிப்பு: சுவிஸ் தலைநகர் பேர்னில் மலரஞ்சலி நிகழ்வு.. (படங்கள்& வீடியோ)

0

இலங்கை குண்டுவெடிப்பு: சுவிஸ் தலைநகர் பேர்னில் மலரஞ்சலி நிகழ்வு.. (படங்கள்& வீடியோ)

கடந்த ஈஸ்டெர் திருநாள் அன்று இலங்கையில் கொழும்பு கொச்சிக்கடை, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உட்பட ஒன்பது இடங்களில் வெடிக்கப்பட்ட “பயங்கரவாதக் குண்டு தாக்குதல்களில் கொல்லப்பட்ட 350 க்கும் அதிகமான பொதுமக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும், காயமடைந்தோர் நலம் பெற வேண்டியும், மேற்படி தாக்குதலைக் கண்டித்தும் சுவிஸின் பலபகுதிகள் உட்பட உலகெங்கும் உள்ள மக்கள், தத்தமது நாடுகளில் கண்டன நிகழ்வுகளை நடத்தி வருவது நீங்கள் அறிந்ததே.

அந்தவகையில் நேற்றையதினம் சுவிஸ் தலைநகர் பேர்னில் “மலரஞ்சலி நிகழ்வு” நடத்தப்பட்டு உள்ளது. இதனை சுவிஸ் வாழ் தமிழ்மக்களின் சார்பில், திரு.பகீரதன், திரு.வைகுந்தன், திரு.வின்சன் ஆகியோர் ஏற்பாடு செய்து சமூகவலை தளங்கள் மூலம் விடுத்த அறிவித்தலை தொடர்ந்து, பெரும்திரளான தமிழ்மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்ததுடன், அவ்வழியால் சென்ற சுவிஸ் மக்களும் கண்ணீர் மல்க, மனமுருகி பிரார்த்தித்தது எல்லோர் மனதையும் கலங்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

திரு.ராசன் என்பவர் ஆரம்ப உரையை நிகழ்த்த திரு.வின்சன், திரு.சுரேஷ் ஆகியோர் பொதுமக்கள் சார்பாக உரையாற்றி இருந்தனர். அதேபோல் சுவிஸ் பொதுமக்களும் உரையாற்றினர்.

மேற்படி நிகழ்வு குறித்து ஏற்பாட்டாளர்களில் ஒருவரான திரு.பகீரதன் என்பவர் “அதிரடி” இணையத்துக்கு வழங்கிய பேட்டியில், “இந்நிகழ்வானது எந்தவொரு அமைப்புகள் சாராதும், பொதுமக்கள் சார்பாகவே நடத்தப்பட்டதுடன், நாம் சமூகவலைத் தளங்களில் அறிவித்து சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு உள்ளாகவே பெருமளவில் மக்கள் கலந்து சிறப்பித்தது அவர்களின் நல்உணர்வை வெளிப்படுத்துவதாகவும்” குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 5 =

*