;
Athirady Tamil News

காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் – வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம்.!!

0

அப்பாவி மக்ககளின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குலாகும் – வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம்.

அப்பாவி மக்ககளின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குலாகும் என வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம் அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டி கண்டித்துள்ளது.
அந்த அமைப்பின் தலைவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 21.04.2019 ம் திகதி உலக கத்தோலிக்கர்களும் கிறிஸ்த்தவர்களும் தமது முக்கியமான உயிர்த்த ஞாயிறு திருநாளைக் கொண்டாடிய வேளை இலங்கையின் மட்டக்களப்பு சியோன் தேவாலயம் , கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், கட்டுவப்பிட்டி செபஸ்தியார் ஆலயம் என்பவற்றிலும் பல நட்சத்திர கோட்டல்களிலும் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுதாக்குதல்களை வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகமானது வன்மையாக தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

இத்தாக்குதல்களால் 45 சிறுவர்கள் உட்பட 325ற்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும் 500 ற்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் காயமடைந்தும் உள்ளமையானது. இலங்கை நாட்டில் நடைபெற்ற மிகப் பெரிய மிலேச்சத்தனமானதும் மிகக்கொடூரமானதுமான பயங்கரவாதச் செயலாக வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம் நோக்குகின்றது.

இச்சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு மக்களுக்காக ஆழ்ந்த அனுதாபத்ததையும் துக்கத்தையும் வெளிப்படுத்துகின்ற அதேவேளை பாதிக்கப் பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களினதும் உறவினர்களினதும் துயரங்களிலும் துன்பங்களிலும் வடமாகாண முஸ்லிம்கள் பங்கேற்று அவர்களது ஆழ்ந்த கவலையினை பகிர்ந்து கொள்கின்றனர்.

சகல மதங்களும் வன்முறைகளை தவிர்த்து வாழ்வதையே முக்கியப்படுத்துகின்றது குறிப்பாக இஸ்லாத்தில் வன்முறைகளுக்கும் பயங்கர வாதத்திற்கும் இடமே இல்லை. ஏன்ற நிலைப்பாடு சகலருக்கும் புரிய வேண்டும்.

ஆகவே இந்த மனிதாபிமானமற்ற காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயலை மேற்கொண்டு இலங்கைத் திருநாட்டில் ஒற்றுமையைச் சீர்குலைக்க எந்த மிருகத்தகமானவர்கள் முயற்சித்தார்களோ அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் இவ்வாறு வழங்கப்படுகின்ற தண்டனையானது இது போன்ற ஈனச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒருபாடமாக அமைய வேண்டும் எனவும் வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம் நம்புகின்றது.

மனிதாபிமானமற்ற தாக்குதல்களை மேற்கொண்ட ஒரு சில வங்கறோத்துக்காரர்களின் நடவடிக்கையால் இலங்கை நாட்டில் வேறு எந்த அப்பாவி மக்களும் பாதிக்கப் படக்கூடாது என்பதுடன் இம்மிலேச்சசெயலை பாவித்து சமுககங்களிடையே பிரிவு, சந்தேககங்கள் மற்றும் குரோத மனப்பாங்கு என்பவை ஏற்பட்டு விடாதிருக்க தேவையான முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் சகல சமூகத்தவர்களும் செய்யவேண்டும் எனவும் வடமாகாண சிவில சமூகம் எதிர்பார்ப்பதோடு தனது பங்களிப்புகளையும் செய்ய முன்வந்துள்ளது.

இவ்வாறான பாதிப்புக்களில் இருந்து அப்பாவி மக்களைப் பாதுகாக்க இலங்கை அரசும், பாதுகாப்புத் துறையினரும்,சமயக் கட்டமைப்புக்களும்,சிவில் சமூக அமைப்புக்களும், சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகள் அமைப்புக்களும் முயற்சிக்க வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட சகலரையும் தயவுடனும் அன்புடனும் கேட்டுக் கொள்கின்றோம்.

தலைவர்
வடமாகாண முஸ்லீம் சிவில் சமூகம்

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + eleven =

*