;
Athirady Tamil News

கொழும்பு சிறைச்சாலைகளுக்கு கடற்படை பாதுகாப்பு!!

0

கொழும்பிலுள்ள சிறைச்சாலைகளின் பிரவேசப் பாதைகளில் கடற்படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, வெலிகட சிறைச்சாலை, வெலிகடை சிறைச்சாலை வைத்தியசாலை, மகஸின் சிறைச்சாலை, கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலை என்பவற்றுக்கே இவ்வாறு கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு சிறைச்சாலைகளுக்கு மேலதிக பாதுகாப்பைப் பெற்றுத் தருமாறு கடந்த 22 ஆம் திகதி சிறைச்சாலைகள் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வேண்டுகோளின் பேரில் இவ்வாறு கடற்படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + six =

*