;
Athirady Tamil News

வலியை சாதாரண இஸ்லாமிய மக்கள் அனுபவிக்க கூடாது – வினோ!!

0

போராட்ட காலங்களில் தமிழ்மக்கள் அனுபவித்த வலியை சாதாரண இஸ்லாமிய மக்கள் அனுபவிக்க கூடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராத லிங்கம் தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் மட்டகளப்பு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களிற்கான ஆத்மசாந்தி பிரார்தனையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர்….

சர்வதேச பயங்கரவாதத்தின் நீட்சியாக எமது மண்ணிலே தோற்றிகொண்ட பயங்கரவாத நடவடிக்கை இந்த மண்ணிலே மிகபெரிய துயரத்தை ஏற்படுத்திநிற்கின்றது. குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களிற்கான ஆத்மாசாந்திக்கான பிரார்தனைகள் ஒவ்வொரு ஆலயங்களிலும் இடம்பெறவேண்டும். இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமலிருக்க இந்த அரசாங்கம் சகல முயற்சிகளையும் எடுக்கவேண்டும்.அதனூடகவே இந்த பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்கமுடிவதுடன் இனங்களிற்கிடையில் ஒற்றுமையையும் ஏற்படுத்த முடியும்.

தமிழீழவிடுதலை போராட்டகாலங்களிலே அப்பாவி தமிழ்இளைஞர்கள், அப்பாவி தமிழ்மக்கள் கைதுசெய்யபட்டு, காணாமல் ஆக்கபட்டவரலாற்றையும் அந்த வரலாற்றினால் அடைந்த வலிகளையும் தமிழ்மக்கள் நன்கு உணர்ந்தவர்கள்.

அது போல இந்த பயங்கரவாத நடவடிக்கைகளில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. இதன்மூலம் சந்தேககைதுகள், சாதாரண கைதுகள் மூலம் அப்பாவி முஸ்லீம் சகோதரர்களுடைய எதிர்காலம் பாதிப்படையகூடாது. தமிழ்மக்கள் அனுபவித்த அந்த வலியை சாதாரண இஸ்லாமிய மக்கள் அனுபவிக்க கூடாது.எனவே இந்த சம்பவத்தின் உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தபட்டு தண்டிக்கபடவேண்டுமே தவிர ஏனையவர்கள் துன்புறுத்தபடகூடாது என இந்த அரசாங்கத்திற்கு சொல்லிவைக்கவிரும்புகிறோம் என தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + two =

*