;
Athirady Tamil News

மாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது, உண்மை என்ன?

0

மாதம்பைப் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்ட மாதம்பை அரபுக் கல்லூரியில் சேவை ஆற்றிய எகிப்து அரசாங்கத்தின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரிந்த ஆசிரியர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவதாக கல்லூரி நிருவாகம் தெரிவித்துள்ளது.

நேற்றைய கைது தொடர்பில் மாதம்பை அரபுக் கல்லூரியின் பொறுப்பாளர் அஸ்செய்க் நௌஸர் டெய்லி சிலோனிடம் இதனைக் கூறினார்.

அஸ்ரப் அப்துல் பத்தாஹ் சித்தீக் முஹம்மத் எனும் பெயரையுடைய குறித்த வெளிநாட்டு ஆசிரியர் கடந்த 2018 ஜனவரி 17 ஆம் திகதி இலங்கை வந்துள்ளார். ஒரு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அவர் இலங்கை வந்துள்ளார்.

இவருடைய ஒரு வருட ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர், முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சிடம் இவருடைய தகவல்கள் அனைத்தையும் வழங்கி வீசாவைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கலாச்சார அமைச்சின் மூலம் பாதுகாப்பு அமைச்சுக்கு அவருடைய தகவல்கள் வழங்கப்பட்டு பின்னர் அங்கிருந்து 2019 ஏப்ரல் 03 ஆம் திகதி வீசா வழங்கலாம் என்ற அனுமதியை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது. இது குடிவர குடியகல்வு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டு இவருக்கான வீசா இன்று (25) கிடைக்கப் பெற்றது.

இந்த வீசாவுடன் கூடிய இவரது கடவுச் சீட்டை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாதம்பை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆரம்பத்தில், “கொன்ட்ரோலரின்” கடிதத்தை காட்டினால் அவரை விடுதலை செய்வதாக பொலிஸார் ஆரம்பத்தில் கூறினர். அதனைக் காட்டியதன் பின்னர் மீண்டும் கடவுச் சீட்டைக் காட்டுமாறு கூறினர். இன்று கடவுச் சீட்டைக் காட்டிதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் போவதாக கூறுகின்றனர்.

அரபுக் கல்லூரிகளுக்கு எகிப்து பல்லைக்கழகத்தினால் ஆசிரியர்களை வழங்கும் நடவடிக்கை இலங்கை அரசாங்கத்துக்கும் – எகிப்து அரசாங்கத்துக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையிலேயே இடம்பெறுகின்றது. இவர்களுக்கு இலங்கையிலுள்ளவர்கள் உணவும், தங்குமிடமும் மாத்திரமே வழங்குவதாகவும் கல்லூரி நிருவாகி தெரிவித்தார்.

நேற்று இவர் கைது செய்யப்பட்டவுடன் கடந்த 4 வருடங்களாக வீசா இன்றி இருந்ததாக ஊடகங்களில் கூறப்பட்டது. இருப்பினும், இவர் ஒரு வருட வீசாவுடன் கடந்த 2018 ஆம் திகதியே இலங்கைக்கு முதல் தடவையாக வந்துள்ளதாகவும் கல்லூரி நிருவாகி அஸ்செய்க் நௌஸர் எம்மிடம் விளக்கமளித்தார்.

கல்லூரி வளாகத்திலிருந்த வாகனம் மாதம்பை கிராமவாசியொருவர் அரபுக் கல்லூரி விடுமுறை என்பதனால், வளாகத்தில் அனுமதியைப் பெற்று நிறுத்திச் சென்றது எனவும் அவர் மேலும் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 13 =

*