;
Athirady Tamil News

IPL 2019 – இறுதிப் போட்டிக்குள் நுழைய போவது யார்?

0

12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ் (18 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (18 புள்ளி), டெல்லி கேப்பிட்டல்ஸ் (18 புள்ளி), ஐதராபாத் சன்ரைசர்ஸ் (12 புள்ளி) ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

இதில் 4 வது இடத்திற்கான போட்டியில் ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் ஒரே புள்ளியுடன் சமநிலை வகித்த போதிலும் ரன்ரேட் அடிப்படையில் ஐதராபாத் அணிக்கு அதிர்ஷ்டம் அடித்தது.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் டாப் 2 இடங்களை பிடித்த 3 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்சும், சென்னை சூப்பர் கிங்சும் கோதாவில் இறங்குகின்றன.

நடப்பு சாம்பியனான சென்னை அணி லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்விகளை சந்தித்ததுடன் முதல் அணியாக பிளே-ஆப் சுற்றை உறுதி செய்தது. இதுவரை பங்கேற்ற அனைத்து ஐ.பி.எல். தொடரிலும் லீக் சுற்றை தாண்டிய ஒரே அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 வது முறையாக இறுதிசுற்றை எட்டுவதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோல்வி அடையும் அணி உடனடியாக வெளியேறாது. அந்த அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் 2 வது தகுதி சுற்றில் மோதும் வாய்ப்பு கிடைக்கும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

சென்னை: ஷேன் வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, டோனி (தலைவர்), அம்பத்தி ராயுடு, துருவ் ஷோரே அல்லது முரளிவிஜய், வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர், ஹர்பஜன்சிங், தீபக் சாஹர்.

மும்பை: குயின்டான் டி காக், ரோகித் சர்மா (தலைவர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், குருணல் பாண்ட்யா, ராகுல் சாஹர், மலிங்கா, பும்ரா, மெக்லெனஹான் அல்லது மயங்க் மார்கண்டே அல்லது அனுகுல் ராய்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 3 =

*