;
Athirady Tamil News

விதிமுறைகளை மீறிய 14 வர்த்தகர்களுக்கு நீதிமன்று தண்டம்!!

0

தென்மராட்சி பகுதியில் பாவனையாளர் சட்ட விதிமுறைகளை மீறிய 14 வர்த்தகர்களுக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று 48 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்திருந்தது.

யாழ்.மாவட்ட பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபை அலுவலகர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தென்மராட்சி பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

அதன் போது , திகதி காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றசாட்டுக்களுடன் 14 வர்த்தகர்களுக்கு எதிராக நேற்றைய தினம் புதன்கிழமை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த வழக்கு விசாரணையின் போது வர்த்தகர்கள் தமது குற்றங்களை ஏற்றுக்கொண்டதால் , நான்கு வர்த்தகர்களுக்கு தலா ஆயிரத்து 500 ரூபாயும் , ஐந்து வர்த்தகர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாயும் , இரண்டு வர்த்தகர்களுக்கு தலா 4ஆயிரத்து 500 ரூபாயும் மூன்று வர்த்தகர்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாயுமமாக மொத்தம் 48 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 2 =

*