;
Athirady Tamil News

திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!!

0

நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் பருத்தித்துறை திக்கம் கொட்டடி பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் அல்வாய் மேற்கு , நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த நடராஜா சிவஜெகநாதன் (வயது 58) என்பவரே உயிரிழந்தவராவர்.

குறித்த நபர் அன்றைய தினம் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டு இருந்த வேளை திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார். அது தொடர்பில் பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை உடல் கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்க பொலிசாருக்கு அறிவுறுத்தினார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + eighteen =

*