;
Athirady Tamil News

பாதுகாப்பு தரப்பினருக்கு திகாம்பரம் பணிப்புரை!! (படங்கள்)

0

மலையகத்திற்கு மேலும் பாதுகாப்பினை பலபடுத்த பாதுகாப்பு தரப்பினருக்கு அமைச்சர் திகாம்பரம் பணிப்புரை

கடந்த 21ம் திகதி உயிர்த்த ஞாயிறான்று இடம்பெற்ற அசாதாரன சூழ்நிலை காரனமாக மலையகத்தில் மேலும் பாதுகாப்;பினை பலபடுத்துமாறு தொழிலாளர் தேசியசங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்டஉட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் பணிப்புரை விடுத்துள்ளார் 09.05.2019.வியாழகிழமை அட்டன் தொழிற்பயிற்சி நிலையத்தில் அட்டன் பொலிஸ்வலையத்திற்கு பொருப்பான பொலிஸ் அத்தியட்சகர் ரவிந்திரஅம்பேபிட்டி அவர்களினால் பாதுகாப்பு தொடர்பில் ஏற்பாடு செய்யபட்ட கலந்தரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார் இந்த பாதுகாப்பு கலந்தரையாடலின் போது அமைச்சர் உட்பட நுவரெலியா மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் நுவரெலியபா மாவட்ட அரசாங்க அதிபர் புஸ்பகுமார அம்பகமுவ பிரதேச செயலாளர் சமரதூங்க உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ்நிலைய பொருப்பதிகாரிகள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் பழனி திகாம்பரம் கடந்த உயிரத்த ஞாயிறன்று நாட்டில் இடம்பெற்ற சம்பத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் இதுபோன்ற சம்பவம் ஒன்று இடம்பெறபோவதாக பாதுகாப்பு தரப்பினர் ஊடாக தகவல் வெளியாகியபோது அதனை கண்டு கொள்ளாமல் இருந்து தரப்பினர் குறித்தும் நான் பெரிதும் கவலையடைகிறேன் சம்பந்த பட்டவர்கள் உறிய முறையில் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தால் இந்த தாக்குதலை தடுத்தி நிருத்தி இருக்காலம் அதுமட்டும் அல்ல 300கும் உயிர் இழந்திருக்கமாட்டார்கள் 500கும் மேற்பட்டார் காயங்களுக்கு உள்ளாகியிருக்கமாட்டார்கள்.

இந்த சம்பவத்திற்கு பிறகு நாட்டில் பொருளதார பிரச்சினை ஒன்று ஏற்பட்டுள்ளது இலங்கை நாட்டுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைந்து காணபடுகிறது எனவே எமது நாடடின் பொருளாதாரத்தை அதிரித்து கொள்ள வேண்டுமானால் எமது நாடு பழய நிலைக்கு வர வேண்டும் அதற்கு பொதுமக்கள் அனைவரும் எமது பாதூகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பினை வழங்கவேண்டும்.

எமது மத்தியில் ஜாதி மதம் வேறுபாடு இல்லை நாட்டில் ஏற்பட்ட சம்பவத்தை வைத்து கொண்டு நாட்டில் வாழுகின்றஅனைத்து முஸ்லிம் மக்களும் பயங்கவாதிகள் அல்ல 30வருடங்கள் இடம்பெற்ற யுத்தத்திற்கு பிறகு எமது நாடு தற்பொழுது நல்லதொரு நிலமைக்கு வந்து அபிவிருத்தி திட்டமங்களை நாம் மேற்கொண்டு செல்கிறோம் எனவே மகக்ளுக்கு சந்தேக மாணவர்கள் தொடர்பில் தகவல் கிடைத்ததால் உடனடியாக பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்குமாறு கேட்டு கொண்டார்.

இதன் போது இந்த கலந்துரையாடலின் போது மௌவி ஒருவர் கருத்து தெரிவிக்கiயில் இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு பிறகு நாட்டில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை தடைசெய்யுமாறு கொண்டுவரபட்டது இந்த சட்டத்திட்டத்தினை நாங்கள் எற்று கொள்ளுகிறோம் இருந்தாலும் முஸ்லிம் மாணவிகள் பாடசாலைக்கு செல்லும் போது கட்டாயம் புர்கா அணிந்து தான் செல்லுவதற்கு அதற்கான ஒரு சட்டத்தினை கொண்டுவர முன்வரவேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டார்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + four =

*